* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.
* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
TODAY
Just Check |
* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.
* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.
* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.
No comments:
Post a Comment